2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

வெருகல் பிரதேசத்தில் காணி அமைச்சின் நடமாடும் சேவை

Princiya Dixci   / 2015 ஜூன் 18 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹூஸைன் 

காணி அமைச்சின் நடமாடும் சேவை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் நாளை வெள்ளிக்கிழமை (19) இடம்பெறவுள்ளதாக பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.

நாளைக் காலை 09 மணிக்குத் தொடங்கும் இந்த நடமாடும் சேவையில் பிரதேசப் பொதுமக்கள் தங்கள் காணி சம்பந்தப்பட்ட சகல அலுவல்களையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்றும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த நடமாடும் சேவையில் காணி அமைச்சின் அதிகாரிகளும் மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் அதிகாரிகளும் பிரதேச செயலக அதிகாரிகளும் சேவையாற்றவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .