2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கஷ்டப் பிரதேச கொடுப்பனவு நிலுவை வழங்கப்படுகின்றது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 19 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவைச் சேர்ந்த  அதிபர், ஆசிரியர்களுக்கு 2007ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து டிசெம்பர் மாதம்வரை வழங்கப்படாமலிருந்த கஷ்டப் பிரதேச கொடுப்பனவு நிலுவை  தற்போது வழங்கப்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆசிரியர்களும் ஆசிரியர் தொழிற்சங்கங்களும்  மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.   இது தொடர்பான தனி நபர் பிரேரணையை கிழக்கு மாகாணசபையில்  கடந்த ஒக்டோபர் மாதம் இவர் சமர்ப்பித்திருந்தார். இதைத் தொடர்ந்து  முன்னெடுக்கப்பட்ட முயற்சியினால் இந்த நிலுவை  வழங்கப்படுகின்றது.

இந்த நிலையில்,  35 பாடசாலைகளைச் சேர்ந்த 430 ஆசிரியர்கள் இந்த நிலுவையை பெறுவதுடன்,  இதற்கென சுமார் 79 இலட்சம் ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .