Sudharshini / 2015 ஜூன் 20 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவரை வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற 30 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரை சேருநுவர பொலிஸார் இன்று (20) அதிகாலை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் கணவன் தொழிலுக்குச் சென்ற சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கொண்டு, குறித்த இளைஞன் யுவதியின் வீட்டுக்குள் சென்றுள்ளார் என சேருநுவார பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் நடந்த சம்பவத்தை தனது கணவனிடம் தெரிவித்ததையடுத்து, பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை இன்று சனிக்கிழமை (20) அதிகாலை கைது செய்ததாகவும் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
14 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
2 hours ago