Thipaan / 2015 ஜூன் 23 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
தோப்பூர் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (22) இரவு இடம்பெற்ற விபத்தில் 26 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞன் படுகாயடைந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
தோப்பூர் பட்டித்திடல் பிரதேசத்தில் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், ஹெண்டர் வாகனம் ஒன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரவு நேர விருந்துபசாரம் ஒன்றில் கலந்து விட்டு இருவரும் வீடு திருப்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது தோப்பூர் பாலத்தடிச் சேனையைச் சேர்ந்த க.ஜெகான் என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் படுகாயமடைந்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த கு.கலாவவன் கண்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார் எனவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago