Thipaan / 2015 ஜூன் 28 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டஇளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி பாசறை, கிளைத் தலைவர் டாக்டர் ஈ.ஜி குணாளன் தலைமையில் சனிக்கிழமை (27) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சமூக சேவையில் ஆர்வமுள்ள 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கிராம மட்டங்களில் பொது மக்கள் மத்தியில் செயற்படும் விதங்கள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மெடியாவ குளத்தில் நேற்று சனிக்கிழமையும் இன்றும் (28) இடம்பெற உள்ளதாக கிளை நிறைவேற்று அதிகாரி டாக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிகழ்வில் கலந்து கொள்வது மட்டுமல்லாது மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் செய்யும் வேலைத்திட்டங்களிலும் கலந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும் கிளை நிறைவேற்று அதிகாரி வேண்டுகோள் விடுத்தார்.



13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago