Princiya Dixci / 2015 ஜூன் 29 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
நல்லாட்சியை தொடர்ந்து நிலைநாட்ட அனைவரதும் வாக்குகள் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றியடைய செய்ய வைப்போம் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் திங்கட்கிழமை (29) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று சகல மக்களும் நிம்மதியாக வாழ்கின்றனர். யாரும் எவ்வித அச்சமுமின்றி கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களினதும் பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றினதும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அரச உத்தியோகஸ்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு பல்வேறு வகையான நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் மூலம் மக்களின் வாழ்க்கைச் சுமை குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலை தொடர வேண்டும். அப்போதுதான் நமது எதிர்கால சந்ததியினர் இந்நாட்டில் நிம்மதியாக வாழும் சூழ்நிலை உருவாகும். அதற்காக வரும் பொதுத் தேர்தலில் அனைவரும் ஐக்கிய தேசியக்கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago