Princiya Dixci / 2015 ஜூன் 29 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லாட்சிக்காக பாடுபட்டு உழைத்த மக்களை நல்லாட்சியின் உள்ளே இருக்கும் சிலர் குழிதோண்டிப்புதைக்க முற்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
கல்குடாவில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இலங்கையில் நல்லாட்சியைக் கொண்டுவருவதில் சிறுபான்மை மக்கள் பெரும் பங்காற்றினர். இந்த உழைப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பங்கும் அளப்பரியது.
ஆனால், நல்லாட்சிக்காக பாடுபட்டு உழைத்த மக்களை நல்லாட்சியின் உள்ளே இருக்கும் சிலர் குழிதோண்டிப்புதைக்க முற்பட்டுள்ளனர். இதனால் சிறுபான்மை மக்கள் பாதித்து விடுவார்கள் என்று நாடாளுமன்றத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் துணிச்சலுடன் குரல்கொடுத்தார்.
20ஆவது திருத்த சட்டத்தில் கொண்டுவந்த மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தமைக்கு பொறுப்புடன் இருந்து செயற்படவேண்டிய அமைச்சர் ராஜித சேனாரத்ன ஒழுக்கம் தவறி அமைச்சர் ஹக்கீமுக்கு பேசியிருப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும் என்றார்.
13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago