Princiya Dixci / 2015 ஜூன் 29 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.நிரோஷினி
கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 684 ஊழியர்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டினால் நிரந்தர நியமனம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) வழங்கிவைக்கப்பட்டது.
இதற்கிணங்க, அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு 131 நியமனங்களும் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு 178 நியமனங்களும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு 375 நியமங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கௌரவ அதிதிகளாக மாகாண அமைச்சர்களான எம்.ஐ.எம்.மன்சூர், ஆரியபதி கலபதி, மாகாண சபை பிரதித் தவிசாளர் பிரசன்ன, உறுப்பினர்களான, ஆர்.துரைரட்ணம், ராஜேஷ்வரன், ஆர்.எம்.அன்வர், ஜே.லாஹீர், சிப்லி பாறூக் மற்றும் முதலமைச்சின் செயலாளர் யூ.எல். அஸீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago