Princiya Dixci / 2015 ஜூன் 30 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பச்சைநூர், இருதயபுரம், கினாந்திமுனை, ஒட்டுப்புல்வெட்டை மற்றும் பெருவெளி ஆகிய இடங்களில் செய்கை செய்யப்பட்ட சுமார் 1,200 ஏக்கர் சிறுபோக வேளாண்மை நீர் இன்றி அழியும் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்வெளியில் மொத்தமாக 3,500க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் வேளாண்மை செய்யப்படுகின்றது. இதில் 1,200 ஏக்கர் காணிக்கு சீரான நீர் பாய்ச்சல் கிடைக்காமையினால் வேளாண்மைகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அழிவிலிருந்து விவசாயிகளை மீட்க முடியுமாக இருந்தால் இரண்டு நாட்களுக்குள் இங்குள்ள வேளாண்மைகளுக்கு நீர் கிடைக்க வேண்டும்.
இது தொடர்பாக இவ் வெளியிலுள்ள விவசாய சம்மேளனங்களினால் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்தும் இன்னும் ஒரு சாதகமான முடிவுகள் கிடைக்கப் பெறவில்லை.
இன்னும் சில தினங்களில் நீர் கிடைப்பதற்காக உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் இவ்வயல்வெளியில் விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளையும் ஒன்று சேர்த்து பாரிய ஆட்பாட்டமொன்றை மேற்கொள்வோமென அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago