Suganthini Ratnam / 2015 ஜூலை 01 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
15 கிலோ மரை இறைச்சியை தம்வசம் வைத்திருந்த ஒருவருக்கு 06 மாதம் சிறைத்தண்டனை விதித்து மூதூர் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தானு காட்டுப் பகுதியில் வேட்டையாடி மரை இறைச்சியை தம்வசம் வைத்திருந்தபோதே இவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.
இவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், 12,500 ரூபாய் தண்டம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது. இருப்பினும், இவர்
தண்டம் செலுத்தத் தவறிய பட்சத்திலேயே 06 மாத சிறைத்தண்டனையை விதித்து மூதூர் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் தீர்ப்பளித்தார்.
13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago