2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

நோன்பு தினத்தையொட்டி அரச ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்குமாறு கோரிக்கை

Sudharshini   / 2015 ஜூலை 04 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

முஸ்லிம்களின் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, தமது சம்பள பணத்தை முன்கூட்டி வழங்க அரசு முன்வரவேண்டும் என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆண்டுதோறும் சித்திரைப் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது. சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் தமிழ் மற்றும் சிங்களச் சகோதரர்களின் வசதிகருதி, அந்த இனத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதச் சம்பளம் முன்கூட்டிவழங்கப்பட்டு வருகின்றது.

அவ்வகையில், இம்முறை றமழான் மாதப்பிறை 29இல் முடிவுற்றால் 18அம் திகதியும் 30இல் முடிவுற்றால் 19ஆம் திகதியும் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.

எனவே, இதனைக் கருத்திற்கொண்டு முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் நோன்புப் பெருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், இம்மாதச் சம்பளத்தை இம்மாதம் 13ஆம் திகதியளவில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .