Kanagaraj / 2015 ஜூலை 04 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்
அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த உல்லாச பிரயாணி ஒருவரின் இடையை தடவிய இளைஞர் ஒருவரை நிலாவெளி பீச் ஹோட்டலில் வைத்து கைது செய்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி உல்லாச கடற்கரையில் வைத்து அனுராதபுரம் கெப்பிட்டி கொல்லாவ பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு அமெரிக்கா உல்லாச பிரயாணி ஒருவரின் இடையை தடவியதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவிக்கின்றார்கள்.
சந்தேக நபருடன் மேலும் எட்டு இளைஞர்களும் கெப்பிட்டி கொல்லாவ பகுதியிலிருந்து நிலாவெளி கடற்கரைக்கு வந்திருந்ததாகவும் குறித்த நபரே அவ்வாறு தடவியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago