Kanagaraj / 2015 ஜூலை 06 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் கல்வி வலயத்துக்குட்பட்ட தழிழ் மொழி மூலப் பாடசாலைகள் இரண்டில் நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு களவாடப்பட்டுள்ளதாக அப்பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்தனர்.
முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளுக்கு நோன்பினை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தினை பயன்படுத்தியே இத்திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அப் பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்தனர்.
திருடப்பட்ட மோட்டார் இயந்திரம் ஒன்றின் பெறுமதி ஒருஇலட்சம் ரூபாய்க்கு குறையாமல் இருக்குமெனவும் அப்பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி திங்கட்கிழமை (06) கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அப் பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு இப்பாடசாலைகளுக்கு காவலாளிகள் நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
14 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
2 hours ago