Suganthini Ratnam / 2015 ஜூலை 07 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
சாராயம் வடித்து விற்பனை செய்தமை மற்றும் அதை அருந்திவிட்டு குழப்பம் விளைவித்தமை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஒருவருக்கு இன்று செவ்வாய்க்கிழமை பதினாராயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன், இதனை செலுத்தாத பட்சத்தில் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி.சரவணராசா தீர்ப்பளித்தார்.
கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் மூதூரில் சாராயம் குடித்துவிட்டு பிரதேச மக்களுக்கு குழப்பம் விளைவித்ததாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய கைதுசெய்து சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். இதை அடுத்து, சந்தேக நபரை குற்றவாளியாகக் இனங்கண்டு தண்டம் விதித்ததுடன், அதனை செலுத்தாத பட்சத்தில் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
14 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
2 hours ago