Suganthini Ratnam / 2015 ஜூலை 10 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக், வடமலை ராஜ்குமார்
திருகோணமலை மெக்கெய்சர் பொது விளையாட்டு மைதானத்தில் மனித புதைகுழி இருப்பதாக கூறப்பட்ட பகுதி, ஆரம்ப காலத்தில் மயானப் பிரதேசமாக இருந்திருக்கலாமென்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
திருகோணமலை மெக்கெய்சர் பொது விளையாட்டு மைதானத்தில் மனித புதைகுழி இருப்பதாக கூறப்பட்ட பகுதி மீண்டும் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று வியாழக்கிழமையும் (09) மேலும் நான்கு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை நீதவான் ஈ.சரவணராஜா முன்னிலையில் இப்பணி திங்கட்கிழமை (06) ஆரம்பமாகியது. இதுவரையில் ஒன்பது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட ஜந்து மனித எச்சங்கள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்த மனித புதைகுழி தோண்டும் நடவடிக்கையின்போது பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த இடத்திலும் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்த மனித புதைகுழி தோண்டும் நடவடிக்கையின்போது நில அளவை அதிகாரிகளும் சமூகமளித்திருந்தார்கள்.
கடந்த 2014ஆம் ஆண்டு திருகோணமலை மெக்கெய்சர் பொது விளையாட்டு மைதான புனரமைப்புப் பணிகள் நடைபெற்றவேளை, அங்கு குழிகள் தோண்டும்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிலையில், அகழ்வு நடவடிக்கை சிலகாலம் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

15 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
2 hours ago