Suganthini Ratnam / 2015 ஜூலை 10 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு கிலோ கஞ்சாவை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் தொடர்பில் திருகோணமலை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்குத் தவணைகளின்போது, நேற்று வியாழக்கிழமை சந்தேக நபர் வழக்குத் தவணைக்கு சமூகம் அளித்தபோதும் விசாரணை மேற்கொள்ளவேண்டும் எனக் கருதி இம்மாதம் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தம்பலாகமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மையில்தீவு, சிராஜ் நகர் பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு கிலோ கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் தம்பலகாமம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு வழக்குத்தாக்கல்; செய்யப்பட்டிருந்தது. அப்போது சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டதோடு, அவ்வழக்கு திருகோணமலை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில், மீண்டும் விசாரணை மேற்கொள்ளவேண்டும் எனக் கருதியே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
14 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
2 hours ago