Suganthini Ratnam / 2015 ஜூலை 13 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
இந்தியாவிலிருந்து திரும்பிய நிலையில் சுமார் ஏழு வருடங்களாக அடிப்படை வசதிகளின்றி தாங்கள்; வாழ்ந்துவருவதாக நொச்சிக்குளம், சாந்திபுரம் கிராம மக்கள் தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்டத்தின் மொரவௌ பிரதேச செயலாளர்; பிரிவில் நொச்சிக்குளம், சாந்திபுரம் கிராமம் உள்ளது. யுத்த சூழ்நிலை காரணமாக 1990ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்று, 2007ஆம் ஆண்டு தங்களின் சொந்த இடத்துக்கு திரும்பிய 23 குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றன.
இந்தியாவிலிருந்து திரும்பிய தாங்கள் கொட்டில்களிலும் ஓலைக்குடிசைகளிலும் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவருவதாகவும் அவர்கள் கூறினர்.
வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதருவதாக தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் கூறியபோதிலும், அவை செய்து தரப்படவில்லை. இதனால், தாங்கள் ஏமாந்துபோயுள்ளதாகவும் இம்மக்கள் கூறினர். இந்நிலையில் வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதந்தாலே, எதிர்வரும் பொதுத்தேர்தலில் தாங்கள் வாக்களிப்போம் என்றும் இம்மக்கள் கூறினர்.
இம்மக்களின் பிரச்சினை தொடர்பில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) கேட்டபோது, 'இம்மக்களின் பிரச்சினை தொடர்பில் பிரதேச செயலாளர் ஊடாக மீள்குடியேற்ற அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான நிதி கிடைத்தவுடன் இவர்களுக்குரிய அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
15 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
2 hours ago