Suganthini Ratnam / 2015 ஜூலை 15 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை, திரியாய் கிராமத்தில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி இதுவரையில் ஒன்பது பேர் மரணமடைந்ததுடன், 15 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று அக்கிராம அலுவலர் எஸ்.இராசலிங்கம் தெரிவித்தார்.
இக்கிராமத்தில் யானைகளின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றது. யானைகளின் தொல்லையை இல்லாமல் செய்ய மின்வேலி அமைத்துத்தருமாறு பல தடவைகள் உரியவர்களிடம் கோரியபோதிலும், அமைத்து தரப்படவில்லை என்றும் கிராமவாசிகள் தெரிவித்தனர்.
திரியாய் கிராமத்தில் மட்டுமன்றி குச்சவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட சலப்பையாறு, தென்னமரவாடி, மதுரங்குடா, கள்ளம்பத்த ஆகிய கிராமங்களிலும் யானைகளின் தொல்லை காணப்படுகின்றது என்று குச்சவெளி பிரதேச செயலாளர் பொன்னம்பலம் தனேஸ்வரன் கூறினார்.
14 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
2 hours ago