2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

சிறுவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய வயோதிபருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 ஜூலை 16 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                  

12 வயது சிறுவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 63 வயது வயோதிபருக்கு இன்று வியாழக்கிழமை (16) திருகோணமலை நீதிமன்ற  நீதிபதி ரி.சரவணராஜா, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.    
                             
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூபா நகர் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தைக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வயோதிபர் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் தனது வீட்டுக்கு வந்த அயல் வீட்டு சிறுவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். 

இது தொடர்பில் சிறுவனின் தந்தை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் குறித்த வயோதிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .