2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 17 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  இரண்டாம் கண்டம் பகுதியில் 60 கிராம் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் 51 வயதுடைய ஒருவரை புதன்கிழமை (15) இரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர் தனது நண்பர்களுக்கு  தொடர்ந்து கஞ்சாவை விற்பனை செய்துவருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இவரிடம் சோதனை செய்து கஞ்சாவையும் கைப்பற்றினர்.

ஹொரவப்பொத்தானை பிரதேசத்திலிருந்து கஞ்சாவை பெற்று, தனக்கு நம்பிக்கையான நண்பர்களுக்கு இதை விற்பனை செய்வதாக சந்தேக நபர்  வாக்குமூலம் அளித்துள்ளதாகவும்  பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .