Suganthini Ratnam / 2015 ஜூலை 19 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் இரு குழுவினருக்கு இடையில் சனிக்கிழமை (18) இரவு ஏற்பட்ட கைகலப்பில் இருவர் காயமடைந்த நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும்; இருவரை கைதுசெய்ததாக கந்தளாய்; பொலிஸார் தெரிவித்தனர்.
மதுபானம் அருந்திய நிலையில் மேற்படி இரு குழுவினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் கைகலப்பில் ஈடுபட்டவர்கள் பாடசாலை மாணவர்கள் எனவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
8 minute ago
14 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
20 minute ago