Princiya Dixci / 2015 ஜூலை 19 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
ஆட்சியாளர்களுக்கு இன்றியமையாத பேரம் பேசும் சக்தியாக இத்தேர்தலில் மாறுவதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், நேற்று சனிக்கிழமை (18) தெரிவித்தார்.
திருகோணமலை, சேருவில தேர்தல் தொகுதியில் நேற்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் தொகுதிக் கிளை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்த உரையாற்றுகையில்,
இந்த அரசாங்கத்திடம் நாம் மிகவும் நிதானமாக நடந்து கொள்கின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவராவார்.
எனவே, இந்த ஆட்சியும் அமையவுள்ள ஆட்சியும் நமக்கு சாதகமான பல சந்தர்ப்பங்களை கொண்டுள்ளது. இதனை நாம் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தேர்தலின் பின்னர் எமது தேசிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகின்றேன் என்றார்.
6 minute ago
9 minute ago
10 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
10 minute ago
15 minute ago