Suganthini Ratnam / 2015 ஜூலை 21 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
திருகோணமலையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் மாவட்டத்தில் மூன்று நாடாளுமன்ற ஆசனங்களை பெற முடியும். அவ்வாறு பெறப்படும் ஆசனம் ஒன்றை முஸ்லிம்களுக்கே வழங்குவோம் என திருகோணமலை மாவட்டத்தின் தலைமை வேட்பாளர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலை நியூ சில்வஸ்டார் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை(19) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர்.
மத்திய அரசாங்கத்துடன் இணைவதால் முஸ்லிம்களுக்கு எதிர்காலம் கிடைக்கப்போவதில்லை. பிராந்திய அரசாங்கத்திலேயே அவர்களுடைய எதிர்காலம் தங்கியுள்ளது. அவ்வாறான பிராந்திய அரசாங்கத்தினை நாம் அடையப்போகின்றோம். அதனை யாராலும் தடுக்க முடியாது' என்றார்.
'மேலும், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மை கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் இன்று பெரும்பான்மை கட்சியின் உதவி தேவைப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் இணைந்திருப்பதே எமக்கு பலம்' எனவும் அவர் தெரிவித்தார்.
7 minute ago
13 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
19 minute ago