2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

'எதிர்பார்ப்புகள் நடைபெறும்போதே அபிலாஷைகள் நிறைவேறும்'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 21 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எப்.முபாரக்                           

'தமிழ் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றப்படாமல் கிடைக்கின்ற போதே அவர்களது அபிலாசைகள் நிறைவேறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்டத் தவிசாளரும் மூதூர் தொகுதி அமைப்பாளரும் வேட்பாளருமான எம்.ஏ.எம்.மஹ்ரூப் தெரிவித்தார்.                                    

கிண்ணியாவில் திங்கட்கிழமை(20)மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 'வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் இன்னும் அதன் பிடியிலிருந்து சீரான நிலைக்கு திரும்பவில்லை. மக்களுக்கு சொந்தமான நிலங்கள் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களை அகற்றி மக்களின் நிலங்களை ஒப்படைப்பதும் அவர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் எனது எதிர்கால நடவடிக்கைகளுள் ஒன்றாகும்' என்றார்.

'மேலும்,மீனவர்கள் சுதந்திரமாக கடலில் மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை முற்றாக தளர்த்துவதற்கான  நடவடிக்கை எடுப்பேன். அதேபோன்று, வேலையற்ற இளைஞர், யுவதிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான பலதிட்டங்கள் என்னால் முன்னெடுத்துச் செல்லப்படவிருக்கின்றன. சிறுபான்மை மக்களின் எதிர்காலம் சிறக்கவும் நாட்டின் அபிவிருத்திக்கும் மாகாணம் மற்றும் மாவட்டத்தின் எழுச்சிக்குமான பணிகளை மேற்கொள்ளவுள்ளேன்'; எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .