Suganthini Ratnam / 2015 ஜூலை 22 , மு.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
வயல் காவலுக்காக சென்றுகொண்டிருந்தபோது கரடிகளினால் கடித்துக் குதறப்பட்ட இளைஞர்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலை, கும்புறுப்பிட்டியிலுள்ள நெல்வயலில் காவல் கடமை புரிவதற்கு காட்டோரமாக திங்கட்கிழமை (20) இரவு சென்றுகொண்டிருந்த சிநேகிதர்களான நான்கு பேரை 06 கரடிகள் சூழ்ந்துகொண்டன. இந்நிலையில், கரடிகளிடமிருந்து தப்பிக்கொள்வதற்காக இந்த இளைஞர்கள் படாதபாடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்களில் இருவர் ஓடிச்சென்று மரத்தில் ஏறி தப்பியுள்ள அதேவேளை, ஏனைய இருவரும் கரடிகளிடம் வசமாக மாட்டுப்படவே அவர்களை கடித்துக் குதறியுள்ளன.
கரடிகளிடம் கடிபட்ட இருவரும் உடனடியாக திருகோணமலை பொது வைத்தியசாலையி;ல் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த இளைஞர்களின் முகம், கைகள் உள்ளிட்டவற்றை கரடிகள்; கடித்துக் குதறியுள்ளன. கும்புறுப்பிட்டியை சேர்ந்த தியாகராசா செந்தீபன் (வயது 26) என்பவரே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக நிலாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
6 minute ago
9 minute ago
10 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
10 minute ago
15 minute ago