Suganthini Ratnam / 2015 ஜூலை 22 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
பொருளாதாரமும் இலாபமும் உட்கட்டமைப்பும் நல்லிணக்கமும் ஊழல் மோசடியை இல்லாமல் ஒழித்தல், மக்களின் சுதந்திரத்தை உறுதி செய்தல், மக்களின் கல்வியை மேம்படுத்தல் ஆகிய ஐம்பெரும் திட்டங்களை உள்ளடக்கிய தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்வரும் வியாழக்கிழமை வெளியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று செவ்வாய்க்கிழமை கிண்ணியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'பொது வேட்பாளர் ஒருவரை நாங்கள் எல்லோரும் நிறுத்தி, வெற்றி பெற்று, நல்லாட்சியை இந்த நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் கடந்த ஜனவரி மாதம் எடுத்துக்காட்டினோம். தேசிய ஒற்றுமையை நாங்கள் வலுப்படுத்தினோம்' என்றார்.
'அடுத்த புரட்சியை ஏற்படுத்தும் முகமாக நாடாளுமன்றத் தேர்தலுக்காக இணைந்துள்ளோம். இந்நிலையில், அடுத்த ஐந்து வருடங்களில் மக்கள் நலனை முதன்மைப்படுத்தி வியக்கத்தக்க தேசத்தை கட்டியெழுப்புவோம்.
புதிய அரசாங்கத்தின் மூலம் இன ஐக்கியம் தேசிய ரீதியில் கட்டியெழுப்பட்டுள்ளன. உங்களுடைய நிலங்கள் உங்களுக்கு கையளிக்கப்படும். கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டங்கள் எங்களிடம் உள்ளன. குளங்களை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். சிறிய முதலீட்டாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
கைத்தொழில்பேட்டை திருகோணமலையில் மாத்திரமன்றி, பொலன்னறுவையிலும் மட்டக்களப்பிலும் வன்னியிலும் நிறுவப்படும். அபிவிருத்தியே எங்களுடைய இலக்கு. அரசியல்வாதிகளின் அபிவிருத்தியோ, குடும்ப அபிவிருத்தியோ எங்களுக்கு அவசியம் இல்லை.
திருகோணமலையில் பொருளாதார வலயமொன்றை உருவாக்கி, பல தொழில்பேட்டைகளை நிறுவி, இந்த மாவட்டத்தை சேர்ந்த 25,000 இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் திருகோணமலையின் சம்பூரிலும் இன்னுமோர் இடத்திலும் இரண்டு அனல் மின் நிலையங்கள் நிறுவப்படும். அத்துடன், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் இங்கு அமைக்கப்படும்' எனவும் அவர் தெரிவித்தார்.

6 minute ago
9 minute ago
10 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
10 minute ago
15 minute ago