2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயம்

Princiya Dixci   / 2015 ஜூலை 23 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை - வவுனியா பிரதான வீதியில் வேப்பங்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (23) காலை 9 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான ஒருவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விகாரை வீதி - கோமரங்கடவெல பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.சோமரத்ன (வயது 58) என்பவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது ஏற்பட்ட தூக்கத்தில் காரணமாக மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதென பொலிஸாரின் ஆரம்பகட்ட  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர், தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொறவௌ பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .