Suganthini Ratnam / 2015 ஜூலை 23 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
திருகோணமலை நகரசபையால் வழங்கப்பட்ட காணிகளுக்கான ஆதனவரிகளை காணி உரிமையாளர்களான மக்களின் பெயரில் அறவிடுமாறு நகரசபைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் முதலமைச்சரின் காரியாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றபோதே, அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
1947ஆம் ஆண்டு முதல் காந்திநகர், கஸ்தூரிநகர், சுலோட்கவுஸ் கிராமங்களில் வாழ்;ந்துவருகின்ற மக்களுக்கு 1995ஆம் ஆண்டு முன்னாள் நகரசபைத் தலைவர் பி.சூரியமூர்த்தியினால் காணிகள் அளவிடப்பட்டு வழங்கப்பட்டிருந்தது. அத்துடன், மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புக்களை பெறுவதற்கான அனுமதியும் அப்போது வழங்கப்பட்டது. இதற்காக வழங்கப்பட்ட ஆவணம் செல்லுபடியானதாகவும் அமைந்திருந்தது.
பின்னர் 2010ஆம் ஆண்டு நகரசபைத் தலைவராக இருந்த ச.கௌரிமுகுந்தனின் காலத்தில் 576 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டு, அவை காணிப் பதிவாளர் திணைக்களத்தால் அங்கிகரிக்கப்பட்டு நகரசபைப் பதிவேட்டிலும் பதியப்பட்டது..
இக்காணிக்கான நகரசபையால் அறவிடவேண்டிய வரிகளை சிலரிடம் நகரசபையின் பெயரிலேயே நகரசபை அறவிட்டு வந்தது. இந்தச் சந்தர்ப்பத்திலேயே மிக நீண்டகாலமாக இழுபறியிலிருந்துவந்த இந்தப் பிரச்சினை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தமையையிட்டு இந்த அறிவித்த விடுக்கப்பட்டுள்ளது.

8 minute ago
14 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
20 minute ago