Princiya Dixci / 2015 ஜூலை 26 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளரும் மூதூர் தொகுதியின் பிரதான அபைப்பாளரும் வேட்பாளருமான எம்.ஏ.எம்.மஹ்ரூப், நேற்று சனிக்கிழமை (25) தெரிவித்தார்.
கந்தளாயில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு கூரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஜனவரி 8ஆம் திகதி மக்கள் எவ்வாறு தீர்க்கமான முடிவொன்றை எடுத்தார்களோ அதேபோன்று இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலிலும் கூடுதலான ஆசனங்களை கைப்பற்றி ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.
தற்போது மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதனை ஏற்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே ஆகும். ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்றிருந்தால் மியன்மார் நாட்டில் முஸ்லிம்களுக்கு நேர்ந்த நிலையை போன்றுதான் இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டிருக்கும் என்றார்.
6 minute ago
9 minute ago
10 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
10 minute ago
15 minute ago