Kanagaraj / 2015 ஜூலை 26 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் இருக்கும் போது பாம்பு தீண்டிய நிலையில் நேற்றிரவு (25) கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பயனளிக்காமல் அச்சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
உயிரிழந்த சிறுவன் கிண்ணியா -நடுவூற்று பகுதியைச் சேர்ந்த எம் .ரஹீம் (வயது 15) எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சிறுவனின் சடலத்தை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக திருமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 minute ago
8 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
14 minute ago