2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

காணிகளை அடையாளம் காணுமாறு சம்பூர் மக்களுக்கு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 28 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் சம்பூரில் தத்தமது சொந்த இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அப்பிரதேச செயலாளர் ஊடாக உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அந்த மக்களிடம் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார கேட்டுக்கொண்டுள்ளார்.

சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பான விசேட கூட்டம்,  சம்பூர் கோவில் வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், மீள்குடியேற்றத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் அரசாங்க அதிபர் கூறினார்.
சம்பூரிலுள்ள காணிகளை பரிசீலனை செய்ய குழுவொன்றை நியமிக்குமாறு மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசுப்பிடம் அரசாங்க அதிபர் பணித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .