Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-.ஏ.எஸ்.எம்.யாசீம்,எஸ்.சசிக்குமார்,எப்.முபாரக்
திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலகத்தில் தபால்மூல வாக்கெடுப்பு நிலையத்தினுள்; அனுமதியின்றி உட்பிரவேசித்ததாகக் கூறப்படும் வேட்பாளர் ஒருவரையும் அவரது ஆதரவாளர் ஒருவரையும் புதன்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சருமான நஜீப் அப்துல் மஜீத் மற்றும் அவருடைய ஆதரவாளருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.
இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளருக்கு தகவல் வழங்கியதை அடுத்து அங்கு சென்ற அவர், விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கிண்ணியா பொலிஸாருக்கு பணித்தார்.
இதனைத் தொடர்ந்து, வாக்கெடுப்பு நிலையத்துக்கு அனுமதியின்றி சென்ற இருவரையும் கைதுசெய்தாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
10 minute ago
11 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
11 minute ago
16 minute ago