Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றால் திருகோணமலையை பொருளாதார வலயமாக கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
வடமாகாணத்தின் சுயாதீன திருச்சபைகளை ஒன்றிணைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம், கிளிநொச்சி கூட்டுறவுச் சபை மண்டபத்தில் திங்கட்கிழமை (10) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த நான்கு மாதங்களில் மக்களுக்கு ஏராளமான சேவைகளை செய்துள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் ஆணை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தொடர்ந்தும் சேவையாற்றுவோம்' என்றார்.
'மேலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட நிலப்பரப்புகள் இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன' என்றும் அவர் கூறினார்.
'புதிய அபிவிருத்தித் திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். வடமாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. யாழ்ப்பாண பலாலி விமான நிலையம் முக்கிய விமான நிலையமாக மாற்றப்படவுள்ளது. இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி செலவளித்து கலாசார மன்றம் ஒன்று அமைக்கப்படவுள்ளது' என்றும் அவர் கூறினார்.
'ஐரோப்பிய ஒன்றியம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மூவாயிரம் புதிய வீடுகளை அமைப்பதற்கு முன்வந்துள்ளது. இந்த வீடுகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. கல்வியை மேம்படுத்தும் வகையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விசார் மையங்கள் வடமாகாணத்தின் கிளிநொச்சியில் அமையவுள்ளது' என்றும் அவர் கூறினார்.


6 minute ago
9 minute ago
10 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
10 minute ago
15 minute ago