2025 மே 01, வியாழக்கிழமை

24 மணித்தியாலயத்தில் 38 கொரோனா

Princiya Dixci   / 2021 ஜனவரி 05 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.கீத், அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 38 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், கந்தளாய் - 04, கிண்ணியா -01, திருகோணமலை நகர் - 03, கல்முனை வடக்கு - 01, கல்முனை தெற்கு - 03, அட்டாளைச்சேனை - 02, சம்மாந்துறை - 03, நாவிதன்வெளி - 04, மட்டக்களப்பு - 07, பட்டிப்பளை - 02, காத்தான்குடி - 06, கோரளைப்பற்று மத்தி -01, அம்பாறை - 01 என கடந்த 24 மணி நேரத்தில், இவ்வாறு மொத்தமாக 38 நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளார்கள்.

“பெறப்பட்ட பிசிஆர், அன்டிஜன் பரிசோதனைகள் மூலமாக கிழக்கு மாகாணத்தில் இதுவரைக்கும் 1,323 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். பிராந்திய ரீதியாக  ரீதியாக பதிவுகளின் படி, திருகோணமலையில் 173 பேர், மட்டக்களப்பில் 264 பேர், அம்பாறையில் 34 பேர், கல்முனை பிராந்தியத்தில் பேர் என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டார்கள். 

“இந்த 1,323 தொற்றாளர்களில் 539 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதுடன், 802 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றால் 07 மரணங்கள் பதிவாகியுள்ளன. 

“தொற்று அதிகளவான பரவல் இடமாக கல்முனை நகர், மட்டக்களப்பு_காத்தான்குடி, திருகோணமலையில் நகர் பகுதியில் மூன்று கிராம சேவகர் பிரிவுகளான ஜின்னா நகர், முருகாபுரி, அபயபுர என்ற அடிப்படையில் மூன்று கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .