Nirosh / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 6 நாள்களில் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 67 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், ''திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 06 நாட்களுக்குள் திருகோணமலை நகர் பகுதியில் 43 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், கிண்ணியாவில் 7 தொற்றாளர்களும், மூதூரில் 12 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட இருவருக்கும், தம்பலகாமம், சேருவில, கோமரங்கடவல பகுதிகளில் தலா இருவருக்கும் மொத்தமாக 67 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.'' என்றார்.
இதேவேளை முருகாபுரி, அபயபுர, துளசி புரம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
33 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
1 hours ago