Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
பொன் ஆனந்தம் / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 7 அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களிற்கு துவிச்சக்கரவண்டிகள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்வு, மாவட்ட செயலகத்தில் நேற்று(28) இடம்பெற்றது.
இதன்போது, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் ஆ.உமாமகேஸ்வரன் கலந்துகொண்டு அவற்றை வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வு தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்துப் பண்பாட்டு நிதியத்தின் ஏற்பாட்டில் இந்து சமய அறநெறிக் கல்வி கொடி வாரத்தின் போது சேகரிக்கப்பட்ட நிதியிலிருந்து இவை வழங்கப்பட்டன.
இந்துசமய அறநெறிக் கல்விச் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தி, அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் ஒர் அம்சமாக, மிகவும் பின்தங்கிய பிரதேசங்களிற் கல்விகற்பிக்கும் இந்துசமய அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களது அர்ப்பணிப்பான சேவையை ஊக்கப்படுத்தும் நோக்கிலே இதனை வழங்கினோம் எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago