Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இம்முறை பெரும் போகம் 85 ஆயிரம் ஏக்கரில் வேளாண்மை செய்கை பண்ணப்படவுள்ளதாக, கந்தளாய் பிரதேச விவசாய சம்மேளத்தின் தலைவர் எம்.சம்சுடீன் தெரிவித்தார்.
கந்தளாய், பழைய வாய்க்கால் பகுதி, தம்பலகமம், முள்ளிப்பொத்தானை, வான்எல போன்ற பகுதிகளை உள்ளடக்கிய வகையில் இந்த வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த சிறு போக நெற் செய்கையில் குறைந்தளவிளான பகுதியே செய்கை பண்ணப்பட்டதாகவும், இதற்கு காரணம் கந்தளாய் குளத்தின் நீர் இன்மை, பருவ மழையும் இல்லாததே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது பெரும் போகத்துக்கான பருவ மழைகளும் பெய்வதற்கு ஆரம்பித்துள்ளதால் விவசாயிகள் தங்களது ஆரம்ப பண்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
27 minute ago
1 hours ago