2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கலந்துரையாடல்

எப். முபாரக்   / 2017 நவம்பர் 05 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை  மாவட்டத்தில்  எதிர்வரும் உள்ளூராட்சி சபைத்தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது தொடர்பான கலந்துரையாரல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தேசிய அமைப்பாளருமாகிய அப்துல்லா மகரூப் தலைமையில் திருமலை மாவட்ட அலுவலகத்தில் இன்று (5)  நடைபெற்றது.

 

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் முன்னாள் கிண்ணியா நகரபிதா வைத்தியர் ஹில்மி  மகரூப், இலங்கை கனியமணல் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அப்துல் ரஸாக் (நளீமி), சட்டத்தரணி முகமட் (நளீமி) றமீஸ், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.நிஸ்மி உட்பட முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள்,  பிரதேச சபை உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது, திருகோணமலை மாவட்டத்தில் கட்சியின் பலத்தை அதிகரித்தல் மற்றும் அனைத்து உள்ளூராட்சி மன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகளை அதிகரிக்க அனைவரும் ஒன்றினைந்து பாதுகாக்க வேண்டும்என்று கலந்துரையாடப்பட்டது.       


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X