2026 மார்ச் 23, திங்கட்கிழமை

அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி

கடந்தகால அசாதாரண சூழ்நிலையின்போது  1987ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து 2013ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தோப்பூர், இக்பால் நகர் கிராம மக்கள் தங்களுக்கு இதுவரையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லையெனக் கூறி இன்று வெள்ளிக்கிழமை மூதூர் பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறிருக்க, மூதூர் பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்  கூட்டத்தில் கலந்துகொண்ட திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர், மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசூப் ஆகியோர் ஆர்ப்பாட்ட  இடத்துக்கு வந்து மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டனர். இதன்போது, மூதூர் பிரதேச செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தோப்பூர் இக்பால் நகர் கிராம மக்கள்; மகஜர் கையளித்தனர்.

இது சம்பந்தமாக தாம்  கவனத்திற்கொள்வதாக அவர்கள் தெரிவித்ததை அடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துசென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .