2025 மே 08, வியாழக்கிழமை

‘அடகுவைத்த யானையை மீட்டெடுப்போம்’

Editorial   / 2018 ஜனவரி 31 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்

நடைபெறவிருக்கும் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலையில் மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிடுகிறது சிறுபான்மை அமைச்சர்களின் ஆதிக்கத்தையும் தாண்டி ஐக்கியதேசிய தேசிய கட்சியின் தனித்துவத்தை பாதுகாத்த நாங்கள் இந்த தேர்தல் வெற்றியுடன் அம்பாறையில் அடகுவைத்த யானையை திருகோணமலையில் மீடடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.   

கிண்ணியாவில் செவ்வாய்கிழமை மாலை   இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இனவாதத்தை கக்கும் இந்த சிறுபான்மை கட்சிகளை பெப்ரவரி 11 உடன் திருகோணலையை விட்டு விரட்டி அடிப்போம். இதை அறிந்தே தற்போது வீடு வீடாக சென்று உங்களுக்கு வீடு தருகிறோம், வேலை தருகிறோம் என வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். கடந்த இருபது வருடங்களாக இவர்களின் கட்டுப்பாட்டிலேயே இங்குள்ள பெரும்பாலான சபைகள், மாகாண சபை காணப்பட்டது. இருந்தும் இவார்களால் இங்குள்ள மக்களுக்கு ஒரு செங்கல்லை கூட வழங்க முடியவில்லை. ஐக்கியதேசிய கட்சியால் வழங்கப்பட்ட பாடசாலைகள் வீடுகளிலேயே மக்கள் இன்றும் வசிக்கின்றனர்.

ஆகவே, மத்திய அரசில் அதிகாரத்தில் உள்ள எம்மிடம் இந்த சபைகளின் அதிகாரங்களை கையளியுங்கள். அன்று எனது தந்தை காலத்தில் காணப்பட்ட ஐக்கியதேசிய கட்சியின் யுகத்தை மீண்டும் இங்கு ஏற்படுத்தி காட்டுகிறோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X