2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

அதிகாரிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2016 ஜூன் 23 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, மொறவெவ ஆரம்ப சுகாதார வைத்தியசாலை, கடந்த 13ஆம் திகதி, காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்கானது. இது தொடர்பில், அரச அதிகாரிகள் இதுவரை எதுவித  நடவடிக்கை எடுக்காமையைக் கண்டித்து, பிரதேச மக்கள், இன்று வியாழக்கிழமை (23) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை-ஹொரவபொத்தானை பிரதான வீதியில், கம்பகொட்ட, நாமல்வத்த, பாம்மதவாச்சி, பன்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1959ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த வைத்தியசாலை அமைந்துள்ள இடம், பொருத்தமில்லாத இடம் என, மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு, வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அறிக்கை வழங்கியுள்ளனர்.

இதனால், வைத்தியசாலை புனர்நிர்மாணப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகளினால் பாதிக்கப்பட்ட வைத்தியசாலையைப் புனரமைக்காமல் இருப்பதற்குரிய காரணத்தைக் கூற வேண்டுமெனவும் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அரச அதிகாரிகள் ஆர்பாட்ட இடத்துக்கு வருகை தரும் வரைக்கும் வீதியை விட்டு விலக மாட்டோம் எனவும் ஆர்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .