Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் அதிகாரங்களைக் கைப்பற்றுவதன் ஊடாக, எமது சமூகத்துக்கு விடிவு கிடைக்குமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், குறைந்த பட்சம் கிழக்கில், மாகாண சுகாதார அமைச்சையும் அதிகூடிய பட்சம் முதலமைச்சையும் பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.
தோப்பூரில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை, நேற்று (17) திறந்து வைத்து, மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதியமைச்சர், தமது தேசியத் தலைவர் ரிஷாட் பதியுதீன், தனியொரு மனிதனாக, நல்லாட்சி அரசாங்கத்தைப் பாதுகாத்தார் என்றும் தங்களுக்கான உரிமைகளையும் மாகாண சபைத் தேர்தல் ஊடாக நிரூபித்து, தாங்கள் யார் என்பதை மேலும் காட்ட முனைவோம் என்றார்.
தங்களை பொறுத்தமட்டில், எமது கட்சி தனியொரு இனத்துக்கோ, சமூகத்துக்கோ சொந்தமானதல்ல எனவும் மூவின சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய கட்சியாக உருவெடுத்தளை யாவரும் அறிவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சமூக விடுதலைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தொடர்ந்தும் போராடி வருவதாகவும் எதிர்வரும் மாகாண சபையின் அதிகாரங்களைத் தமது கட்சி கைப்பற்ற வேண்டுமெனவும் இதற்காக கிண்ணியாவில் இருந்து டொக்டர் ஹில்மி முகைதீன் பாவாவைத் தெரிவுசெய்து வேட்பாளராக நிறுத்தவுள்தாகவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 minute ago
2 hours ago
2 hours ago