Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம், ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்
தங்களது குடியிருப்புக் காணிகளை, அத்துமீறி எல்லையிடுவதை, உரிய அதிகாரிகள் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்து, திருகோணமலை, பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கப்பற்றுறை கிராம மக்கள், திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று (29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“எங்களது, குடியிருப்புப் பகுதிகளில் வீடுகள், கிணறுகளை அமைத்து, சுதந்திரமாக வாழவிடு” எனக் குரலெழுப்பிய மக்கள், தங்களின் கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திக்கொண்டு, எதிர்ப்பை வெளியிட்டனர்.
தங்களது மதக் கடமைகளை நிறைவேற்றும் அல் அக்ஸா பள்ளியின் காணிக்குள்ளும் எல்லையிடப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய மக்கள், இதை உரியவர்கள் நிறுத்தி, தங்களைச் சுதந்திரமுள்ளவர்களாக வாழ வழிவிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் நடைபெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றிருந்தது.
மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை உள்நுழையவிடாது, பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன், இதன்போது பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
05 May 2025