2025 மே 05, திங்கட்கிழமை

அத்துமீறி எல்லையிடுவதை நிறுத்துமாறு கவனயீர்ப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா பிரதேசத்துக்குட்பட்ட முஸ்லிம்  மக்களது பூர்விகக் காணிகளுக்குள், வனவிலங்குத் திணைகளத்தால்,  அரச காணியென கல்லிட்டு அடையாளப்படுத்தி வருகின்றார்கள் என, அப்பிரதேச மக்கள்  இன்று (31) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பிரதேச செயலாளர், மக்கள் பேசியிருந்தும் கூட எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையெனவும் தொடர்ந்து அரச காணியென அடையாளப்படுத்தி வருவதால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் நடத்தப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

யுத்தத்துக்கு முன்னர் முஸ்லிம்கள் குடியிருந்து வாழ்ந்த பிரதேசங்களான தீனேரி, கல்லரப்பு, சுண்டியாறு, குரங்குபாஞ்சான், செம்பிமோட்டை, கண்டல்காடு போன்ற இடங்களில், இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டகாரர்கள், “சிறுபான்மை மக்களை நசுக்காதே”, “கல் நாட்டாதே” போன்ற சுலோகங்களை ஏந்திவாறு, கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காணி உறுதிப்பத்திரம் வைத்திருந்தும் அது செல்லுபடியற்றது என  அதிகாரிகள் தெரிவிப்பதாக  காணியுரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கான தீர்வைப்பெற மக்கள் பிரதிநிதிகள், உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வார்ப்பாட்டத்தில், நகரசபை முன்னாள் தவிசாளர் டொக்டர் ஹில்மி,  பிரதேச கிராம உத்தியோகத்தர், பிரதேச சபை உறுப்பினர்கள் சமுகமளித்து பிரச்சினைகளைக் கேட்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X