Thipaan / 2016 ஜூன் 18 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாயில் அனுமதிப்பத்திரமின்றி ஆற்றுமணல் ஏற்றிய நபர் ஒருவருக்கு, இருபதாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து, கந்தளாய் நீதிமன்ற நீதவான் தம்மிக்க பெரேரா, நேற்று வெள்ளிக்கிழமை (17) உத்தரவிட்டார்.
கந்தளாய், சூரியபுர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவருக்கே தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
வான்எல ஆற்றோரங்களில், அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிய போதே குறித்தநபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அவரை, நேற்றைய தினம் (17) கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மேற்கண்டவாறு உத்தரவிட்டதோடு, ஆற்று மணலை அரசடமையாக்குமாறும் உத்தரவிட்டார்.
18 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago