2026 மார்ச் 23, திங்கட்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மாடு அறுத்த இருவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

மூதூர் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி மாடு ஒன்றினை இறைச்சிக்காக அறுத்த இருவரை, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான், நேற்று திங்கட்கிழமை (22) உத்தரவிட்டார்.

மூதூர் ஜின்னாநகர் மற்றும் நடுத்தீவு போன்ற பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 57 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அனுமதிப்பத்திரமின்றி ஐம்பத்தைந்தாயிரம் ரூபாய் பெறுமதியான மாடு ஒன்றினை இறைச்சிக்காக அறுத்த போதே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (22) அதிகாலையில் கைதுசெய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .