Niroshini / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
அனுமதிப்பத்திரமின்றி மூன்று மாடுகளை கொண்டு சென்ற திருகோணமலை ஜின்னாபுரம் பகுதியைச் சேர்ந்த எப்.எம்.சியாத் (வயது 28) என்பவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா புதன்கிழமை (16)உத்தரவிட்டார்.
குறித்த நபர் திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜமாலியா பகுதியிலிருந்து பாளையூற்றுக்கு அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை ஒன்றோடு ஒன்று இணைத்து கொண்டு சென்றபோதே செவ்வாய்க்கிழமை(15) இரவு கைது செய்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சதுரப்பிணைக்கு இருவர் கையொப்பம் இடும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
3 minute ago
37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
37 minute ago
42 minute ago