Princiya Dixci / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, திரியாயப் பகுதியில் அப்பாவைத் தாக்கி காயப்படுத்திய மகனை ஐம்பதாயிரம் ரூபாய் சரீரப்பிணைக்கு இருவர் கையொப்பம் இடும் வரை எதிர்வரும் ஜுன் மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி. சரவணராசா, நேற்று புதன்கிழமை (24) உத்தரவிட்டார்.
திரியாய, ஆறாம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரின் அப்பாவும் அம்மாவும் சண்டைபிடித்த நிலையில் குறித்த நபர் அப்பாவைத் தாக்கியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை, குச்சவெளிப் பொலிஸார் கைதுசெய்து திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி. சரவணராசா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது நீதிவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை குச்சவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026