2025 மே 01, வியாழக்கிழமை

அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.கீத்

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்னால் வைத்தியர்கள், இன்று (12) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.  

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் செயற்பாடுகளால் எதிர்காலத்தில் வடக்கு, கிழக்குக்கு வைத்தியர்களின் அதீதத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாகத் தெரிவித்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

"வடக்கு, கிழக்கிற்கு வைத்தியர்கள் வேண்டாமா?", "வைத்தியர்கள் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம்" போன்ற பதாதைகளை ஏந்தியவாறு, இப்போராட்டத்தை வைத்தியர்கள் முன்னெடுத்தனர்.  

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், சுமார் 45 வைத்தியர்கள் ஈடுபட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .