2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

அரசாங்க அதிபருக்கு பிரியாவிடை

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றி வந்த என்.ஏ.ஏ.புஷ்பகுமார, இன்று (30) முதல் இளைப்பாறுகிறார். ஓய்வு பெற்றுச் செல்லும் இவருக்கு, மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பிரியாவிடை வைபவ​த்தை, மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது, வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், நினைவுச் சின்னங்கள் பரிசில்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இலங்கை நிருவாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான இவர், திறம்பட பல்வேறு சேவைகளை திருகோணமலை மாவட்ட மக்களுக்கு ஆற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராசா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பரமேஸ்வரி, மேலதிக அரச அதிபர் (காணி) எம்.ஏ.அனஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X